

சென்னை,
ஜெம் வீரமணியின் உதவியாளர் சாந்தியிடம் 200க்கும் மேற்பட்ட கேள்விகளால் போலீசார் துளைத்தெடுத்தனர்.
தமிழகத்தையே அதிர வைத்துள்ள ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கில், அவ ருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹ னிடம் போலீசார் 2வது நாளாகத் தீவிர விசா ரணை நடத்தி வருகின்ற னர். இதுவரை, இருவரிட மும் சுமார் 200 க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டு போலீசார் துளைத் தெடுத்தனர்.
இந்த நிலையில் மேலும் 3 சிறுமிகள் புகார் அளித்துள்ளார்கள். சிறுமியரை பாலியல் வன் முறை செய்த, 'ஜெம்' கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரி மையாளர் வீரமணி (வயது 85), 'போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது நெருங்கிய தோழி சாந்தி (61). இவரது கணவர் மகேந்திரசிம்ஹன்(63),உதவியாளர்கணேசன் (55) ஆகியோர், அதே சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
போலீசாருக்கு முக்கிய ஆதாரமாக,வீரமணியின்ரக சிய டைரி மற்றும் அவர்சிறுமியரைபாலியல் வன்முறை செய்த 'வீடியோ'க்கள் சிக்கி உள்ளன. இந்த வழக்கில் விசாரணை தீவிரமாகநடந்து வருகிறது. இந்நிலையில், 3 நாள் காவலில் எடுக்கப்பட் டுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனிடம் இன்று, 2 வது நாளாக போலீசார் கிடுக் கிப்பிடி விசாரணை நடத்தினர்.
நேற்று மட்டும் சுமார் 8 மணி நேரம் இருவரிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது சுமார் 200க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகத்தெரிய வந்துள்ளது.குறிப்பாக, வீரமணியிடம் எத்தனை ஆண்டுகள் பணியாற்றினீர்கள்? பாதிக்கப்பட்ட சிறுமிகளை எவ்வாறு மூளைச்சலவைசெய்து அழைத்து வந்தீர்கள்? சிறுமிகளைத் திரட்டிக் கொண்டு வர இடைத்தரகர்களாகச் செயல்பட்டவர்கள் யார்? வீரமணிக்கும் உங்களுக்கும் இடையே எப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டது?
வீரமணியை மிரட்டி பணம் பறிக்க யார் யாரை அணுகினீர்கள்? வீரமணிக்கு உடந்தையாக இருந்து நீங்கள் எவ் வளவு சொத்துகள் சேர்த்துள்ளீர்கள்? இது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளால் போலீசார் அவர்களைத் துளைத்தெடுத்துள்ளனர்.
இந்த முழு விசாரணையும் நீதிமன்றத்தில் முக்கிய ஆதாரமாகச்சமர்ப்பிக்கப்படஉள் ளதால், அனைத்தும் வீடி யோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் இடங்களுக்குச்சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனிடம் போலீசார் நேரடியாக அழைத்துச்சென்றனர்.
அந்த இடங்களிலேயே வைத்து குற்றச்சம்பவங்கள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
இவ்வழக்கில் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் மற்றும் கணேசன் ஆகியோரின் செல்போன்களைப் பறி முதல் செய்துள்ள போலீசார், அவற்றை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் வாட்ஸ் அப் உரையாடல்களை ஆதாரமாகக்கொண்டு, இவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற நபர்களிடமும் விசாரணை திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப் பதாகக் கூறப்படும் நிலையில், பணப் பரிவர்த்தனை மற்றும் 'டீலிங்' தொடர்பான ரகசியத்தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். இதுவரை 10 சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் வாக்குமூலங் கள் பெறப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.ஆனால் இன்னும் பல சிறுமிகள் பலாத்காரம் செய் யப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வகையில் கூடுதலாக 5 சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அதில் 3 சிறுமிகள் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்கள்.
இந்த வழக்கை விசாரிக்க நேற்று 4 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் அனைத்து விசாரணை ஆவணங்களையும் பெற்றுக் கொண்டு புதிய விசாரணையை தொடங்கி உள்ளார்கள். அவர்களிடம் சிறுமிகளின் வாக்குமூலங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இனி வரும் நாள்களில் இந்த விசாரணை மேலும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.