

குமரி,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணத்தைச் சேர்ந்தவர் மதுமிதா (வயது 28). பிரபல யூடியூபரான இவர் தனது வீட்டில் நகைகள், பணம் அதிகளவு இருப்பதாக காண்பித்து 'ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அடிக்கடி வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் அவரது வீட்டில் 118 பவுன் நகைகள் கொள்ளை போனது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் நெல்லையைச் சேர்ந்த காண்டிராக்டர் பேச்சி முத்து என்பவர் தனது 5 பவுன் நகையை மதுமிதா பறித்து சென்றதாக குமரி மாவட்டம் ராஜாக்கள்மங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடம் நெல்லை என்பதால் இந்த புகார் பாளை யங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இதுதொடர்பாக காண்டிராக்டர் பேச்சிமுத்துவிடம் பாளையங் கோட்டை தாலுகா போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் யூடியூபர் மதுமிதா மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மதுமிதாவுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.