செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீடு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
Published on

சென்னை,

அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ம் தேதி பாராட்டு விழா நடந்தது. முதல்-அமைச்சராக பழனிசாமி இருந்தபோது, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக இந்த பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான கே.செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

இந்த விழா தொடர்பான அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாத நிலையில், எனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். இப்பிரச்சினை தொடர்பாக அதிமுக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.

இதனிடையே அ.தி.மு.க., கட்சியையோ, பொது செயலாளரையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை. சம்பந்தப்பட்ட அமைப்பாளரிடம் தான் சொல்லியுள்ளார். இதனால் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று செங்கோட்டையனே சொல்லிவிட்டார் இதற்கு பின் இதில் விளக்கம் சொல்ல என்ன இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

இந்நிலையில், இன்று இரவு 7 மணியளவில் ஒரு ஆய்வாளர் மற்றும் 3 போலீசார் அடங்கிய குழுவினர், குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் தோட்டத்து வீட்டுக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுகவினரிடையே விசாரித்தபோது,'தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று செங்கோட்டையன் காவல் துறையிடம் கோரவில்லை. உயர் அதிகாரிகள் திடீர் உத்தரவின் பேரில் அவர்களாகவே பாதுகாப்பு பணியில் ஈடுபட வீட்டுக்கு வந்துள்ளனர்'என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com