நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் சோதனை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் சோதனை
Published on

அரியலூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடியை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நெல் அறுவடை நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி அரியலூர் மாவட்டத்தில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, அதில் 14 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாத வண்ணம் தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரியலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com