பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசனின் கடையில் போலீசார் சோதனை: என்ன நடந்தது..?

டி.டி.எப்.வாசனின் கடைக்கு வருபவர்களால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் கொடுக்கப்பட்டிருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பிரபல யூடியூபரான டி.டி.எப்.வாசன், சென்னை அம்பத்தூர் அயப்பாக்கம் மெயின் ரோடு, சுபாஷ் நகரில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இங்கு மோட்டார் சைக்கிள்களுக்கு ஜி.பி.எஸ். கருவி, அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர், ஹாரன் உள்ளிட்டவைகள் விற்கப்படுவதாகவும், இந்த கடைக்கு வருபவர்களால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் டுவிட்டரில் புகார் கொடுத்து இருந்தார்.

அதன்பேரில் அம்பத்தூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தினர். பின்னர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கக்கூடாது. மீறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கடையின் மேலாளர் ரபினா என்பவரை எச்சரித்த போலீசார், அவரிடம் எழுதி வாங்கி கொண்டனர். மேலும் இது குறித்து டி.டி.எப்.வாசனிடமும் செல்போன் மூலம் போலீசார் விளக்கம் கேட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com