பெண்கள் குறித்து இழிவாக பேசிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கைது

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெண்கள் குறித்து இழிவாக பேசிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கைது
Published on

சென்னை,

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

இதற்குக் கண்டனம் தெரிவித்து நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது. இந்த நிலையில், சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com