பல பெண்களுடன் தொடர்பில் இருந்த போலீஸ் ஏட்டு.. மனைவி எடுத்த அதிரடி முடிவு


பல பெண்களுடன் தொடர்பில் இருந்த போலீஸ் ஏட்டு.. மனைவி எடுத்த அதிரடி முடிவு
x

அடிக்கடி வாட்ஸ்-அப்பில் பல பெண்களிடம் போலீஸ் ஏட்டு பேசி இருந்ததையும், ஆபாச படங்கள் வைத்திருந்ததையும் அவரது மனைவி கண்டுபிடித்தார்.

திண்டுக்கல்


திண்டுக்கல் சீலப்பாடி மகாலட்சுமி நகரை சேர்ந்த பார்த்திபன் (வயது 35) பழனி போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வினோதினி (20). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணமான ஒரு வாரத்திற்குள்ளேயே பார்த்திபனின் நடவடிக்கை சரியில்லையாம். இதனால் வினோதினி, பார்த்திபனின் அன்றாட செயல்பாட்டை கண்காணித்து வந்தார்.

இதற்கிடையில் பார்த்திபனின் செல்போனை எடுத்து வினோதினி பார்த்துள்ளார். இதில் பார்த்திபன் அடிக்கடி வாட்ஸ்-அப்பில் பல பெண்களிடம் பேசி இருந்ததையும், ஆபாச படங்கள் வைத்திருந்ததையும் கண்டுபிடித்தார்.

இது குறித்து பார்த்திபனின் குடும்பத்தினரிடம் வினோதினி கூறியுள்ளார். இதனால் குடும்பத்தினர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக வினோதினியை பார்த்திபன் குடும்பத்தினர் அடித்து வீட்டை விட்டு விரட்டி விட்டுள்ளனர்.இதுகுறித்து அவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் ெகாடுத்தார்.

அதன் பேரில் ஓட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசார் பாத்திபன், அவரது தாய் கண்ணம்மாள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் பார்த்திபன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கன்னிவாடி போலீஸ் நிலையத்திற்குட்ட பகுதியில் நடந்த அடிதடி வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டு முன் ஜாமீன் பெற்றிருந்தார்.

இதற்காக அவர் தினமும் கன்னிவாடி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில் வினோதினி கொடுத்த புகாரின் அடிப்படையில் பார்த்திபனை ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி கைது செய்தனர்.

1 More update

Next Story