ஜெம் வீரமணியுடன் கைது செய்யப்பட்ட தம்பதிக்கு ஜாமின் வழங்க போலீஸ் கடும் எதிர்ப்பு

சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் கடந்த மாதம் 28-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.
ஜெம் வீரமணியுடன் கைது செய்யப்பட்ட தம்பதிக்கு ஜாமின் வழங்க போலீஸ் கடும் எதிர்ப்பு
Published on: 

சென்னை,

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் உள்ளிட்டோர் கடந்த ஆகஸ்டு 28-ந்தேதி கைது செய்யப்பட்டனர். இதில் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய இருவரும் ஜாமின் கேட்டு சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களுக்கு பதிலளித்து, போலீஸ் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில், "வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிக்க வீரமணியிடம் இருந்து சாந்தி 24 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை தடயவியல் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது.

இவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் சாட்சிகளை கலைக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அச்சுறுத்தவும் வாய்ப்புள்ளது. இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதால் இருவரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஜாமின் மனுக்கள், வருகிற 29-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com