தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
Published on

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையத்தில் எலக்ட்ரீசியன் பாண்டியன் வீட்டில் கடந்த 8-ந்தேதி நகை மற்றும் காரை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்ற வழக்கில் 5 பேரை கடந்த 15-ந்தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, சென்னை பெருங்குடி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் பிரசாந்த் (வயது 26) என்பவர் பாதுகாப்பிற்கு வந்திருந்த போலீசாரை கீழே தள்ளி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து போலீசார் பின்தொடர்ந்து ஓடியும் பிரசாந்த்தை பிடிக்க முடியவில்லை. மேலும் மருத்துவமனை அருகே உள்ள ஏரிக்கரையில் அவர் பதுங்கியிருக்கலாம் என்று எண்ணிய போலீசார் டிரோன் கேமராவை பறக்க விட்டும் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. 2 வாரம் ஆகியும் தப்பியோடிய பிரசாந்த்தை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com