காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவு

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவு
Published on

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 47). இவர் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சந்திரனை பரிசோதனை செய்த டாக்டர், அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். சந்திரன் கடந்த 1997-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். இறந்து போன சந்திரனுக்கு சசிகலா (44) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com