கடலூரில் பற்றி எரிந்த போலீஸ் வேன்.. என்ன காரணம்? - டிஐஜி சொன்ன தகவல்

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் நேற்று முழுகடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கடலூரில் பற்றி எரிந்த போலீஸ் வேன்.. என்ன காரணம்? - டிஐஜி சொன்ன தகவல்
Published on

கடலூர்,

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் நேற்று முழுகடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பாதுகாப்பு பணிக்காக காஞ்சிபுரத்தில் இருந்து வந்திருந்த காவலர்கள் நெய்வேலி வடக்குத்து பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை காவலர்கள் வந்த அதிவிரைவுப்படை வாகனம் திடீரென தீப்பிடித்து எறிந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்த நிலையில் வாகனத்தின் முன் பகுதி முழுமையாக எரிந்து சேதமடைந்தது. போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில், நெய்வேலி வடக்குத்து பகுதியில் அதிவிரைவுப்படை வாகனம் தீப்பிடித்து எரிந்ததற்கு மின் கசிவு தான் காரணம் என காஞ்சிபுர சரக டிஐஜி பகலவன் தெரிவித்துள்ளார். வாகனத்தில் உள்ள பேட்டிரியில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பற்றி எரிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com