சென்னை விமான நிலையத்தில் லேசர் ஒளியை மிளிரவிட்டால் கடும் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை

விமானம் தரையிறங்க முயன்றபோது பச்சை நிற லேசர் ஒளிக்கற்றை அடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை,
சென்னை விமான நிலையத்துக்கு கடந்த வாரம் துபாயில் இருந்து 326 பயணிகளுடன் வந்த விமானம் தரையிறங்க முயன்றபோது பச்சை நிற லேசர் ஒளிக்கற்றை அடிக்கப்பட்டது. இதனால் விமானியும், பயணிகளும் பீதியும், பதற்றமும் அடைந்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விமான நிலையம் மற்றும் சுற்றி உள்ள இடங்கள் பாதுகாப்பு நிறைந்த கட்டுப்பாடுகள் அடங்கிய பகுதிகள் ஆகும். எனவே விமான நிலையம் மற்றும் சுற்றி உள்ள இடங்களில் இதுபோன்று லேசர் ஒளிக்கற்றை மிளிர விடக்கூடாது என்று சென்னை போலீஸ்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






