கட்சி பொதுக்கூட்டத்தில் பெண் போலீசாரிடம் அத்துமீறல் - திமுக நிர்வாகிகள் 2 பேர் அதிரடி கைது

பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கட்சி பொதுக்கூட்டத்தில் பெண் போலீசாரிடம் அத்துமீறல் - திமுக நிர்வாகிகள் 2 பேர் அதிரடி கைது
Published on

சென்னை,

விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்ததில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி. மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர்.

நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். கூட்டத்தில் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு கலந்து கொண்டிருந்த நிர்வாகிகள் சிலர் மது போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தலைவர்கள் பேசும் போதே பின்னாலிருந்து கூச்சல் எழுப்பி கூட்டத்தில் பிரச்சனை செய்த அவர்களை அங்கிருந்த நிர்வாகிகள் கண்டித்துள்ளனர்.

மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களை தொடர்ந்து அவர்கள் ஆபாசமாக பேசி மெரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் பாதுகாப்பு பணியில் இருந்த 22 வயதான பெண் காவலரிடம் அக்கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் அத்துமீறி பாலியியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறவே அந்த பெண் காவலர் கதறி அழுதுள்ளார். இதையடுத்து அருகே இருந்த போலீசார் ஒருவரை பிடித்த நிலையில், மற்றோருவர் தப்பியோடியுள்ளார். இதையடுத்து விரட்டிச் சென்ற காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் (24), என்பதும் இவர்கள் இருவரும் திமுக நிர்வாகிகள் என்பதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது விருகம்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகளை அழைத்துச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த நிலையில் பெண் காவலரிடம் அத்துமீறி நடந்து கொண்ட திமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனிடையே அந்த பெண் காவலர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாகவும் புகாரை பெற்றுள்ள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் திமுகவை சேர்ந்த பிரவீன், ஏகாம்பரம் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணியில் இருந்த பெண் காவலரிடம் திமுகவினர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com