மதுவில் விஷம் கலந்து குடித்து போலீஸ்காரர் தற்கொலை

செங்குன்றம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
மதுவில் விஷம் கலந்து குடித்து போலீஸ்காரர் தற்கொலை
Published on

செங்குன்றத்தை அடுத்த வடகரை பாபா நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 35). இவர், சென்னை கொளத்தூர் அடுத்த ராஜமங்கலம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு போலீஸ்காரர் சதீஷ், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சதீஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் சதீஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com