பெண்ணுடன் போலீஸ்காரர் உல்லாசம்; வெளிநாட்டில் இருந்தே தூக்கிய மனைவி

நேற்று முன்தினம் இரவு கணவர் ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார்.
பெண்ணுடன் போலீஸ்காரர் உல்லாசம்; வெளிநாட்டில் இருந்தே தூக்கிய மனைவி
Published on

வளசரவாக்கம்,

மற்றொரு பெண்ணுடன் வீட்டில் குடும்பம் நடத்திய போலீஸ்காரரை துபாயில் பணி புரியும் அவரது மனைவி கையும் களவுமாக பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிநயா (வயது 29). இவர் துபாயில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிகிறார். இவருக்கும், சென்னையை சேர்ந்த மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் அருள் பிரசாத், 34, ம் என்பவருக்கும், கடந்த ம் 2024ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் அபிதயா பணி காரணமாக துபாய் சென்றுள்ளார். இந்நிலையில், அருள் பிரசாத்துக்கும் மற்றொரு பெண்ணிற்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் சென்னை வந்த அபிநயா, இதையறிந்து கணவரை கண்டித்துள்ளார். பின் அவருக்கு தெரியாமலேயே, வீட்டில் கண்கணிப்பு கேமரா பொருத்தி உள்ளார். அதை, தன் போனில் மொபைல் இணைத்துள்ளார்.

மீண்டும் துபாய் சென்ற அபிநயா, சில தினங்களுக்கு முன் கணவருக்கு தெரியாமல் சென்னை வந்துள்ளார். தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை, தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு கணவர் ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார். இதை அறிந்த அபிநயா உடனடியாக வீட்டிற்கு சென்று இருவரையும் கையும் களவுமாக பிடித்தார். அப்போது அருள் பிரசாத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவருடன் இருந்த பெண் அபிநயாவை தாக்கிய கூறப்படுகிறது.

பதிலுக்கு அபிநயாவும் அப்பெண்ணை தாக்கியதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தின், அபிநயாவுக்கு காது அருகே காயம்ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச் பெற்ற அவர், வளசர வாக்கம் மகளிர் காவும் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com