பாலக்கட்டையில் இருந்து தவறி விழுந்து போலீஸ்காரர் காயம்

வேங்கைவயலில் பாலக்கட்டையில் இருந்து தவறி விழுந்து போலீஸ்காரர் காயம் அடைந்தார்.
பாலக்கட்டையில் இருந்து தவறி விழுந்து போலீஸ்காரர் காயம்
Published on

அன்னவாசல் அருகே உள்ள முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி மர்ம ஆசாமிகள் சிலர் அசுத்தம் செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையில் வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராம மக்களிடையே வெளியூர் ஆட்களால் மீண்டும் பிரச்சினை தூண்டப்படுவதாகவும், எனவே வெளியூர் ஆட்கள் யாரும் இங்கு வரக்கூடாது என்று இறையூர் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து வேங்கைவயல், இறையூர் பகுதிகளுக்கு செல்லும் மக்களை கண்காணிக்கவும், அதேபோல் வெளியூர் ஆட்கள் உள்ளே செல்வதை தடுக்கும் வகையில் 4 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 40 போலீசார் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இறையூர் பாலம் அருகே சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த முதல் நிலை காவலர் புஷ்பராஜ் அங்கு உள்ள பாலக்கட்டையில் அமர்ந்திருந்த போது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் இடுப்பில் காயமடைந்த அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com