வெடிகுண்டு வீச்சில் போலீஸ்காரர் பலி: ரவுடி துரைமுத்துவின் கூட்டாளிகளை கைது செய்ய வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

வெடிகுண்டு வீச்சில் போலீஸ்காரர் பலியான சம்பவத்தில் ரவுடி துரைமுத்துவின் கூட்டாளிகளை கைது செய்ய வேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வெடிகுண்டு வீச்சில் போலீஸ்காரர் பலி: ரவுடி துரைமுத்துவின் கூட்டாளிகளை கைது செய்ய வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்
Published on

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி துரைமுத்துவை பிடிக்கச்சென்ற போது காவலர் சுப்பிரமணியன் மீது வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். மக்களை பாதுகாக்கும் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

காவலர் சுப்பிரமணியனை வெடிகுண்டு வீசி கொலை செய்த ரவுடி துரைமுத்து உயிரிழந்துவிட்டாலும், துரைமுத்துவின் கூட்டாளிகளையும் போலீசார் அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்யவேண்டும். வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக் கும் ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங் கள் தமிழகத்தில் இனிமேல் நடைபெறாத வண்ணம் போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com