மே-2 முதல் காவலர்கள் விடுப்பு எடுக்க கூடாது - தமிழக டிஜிபி உத்தரவு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4-ந்தேதி நடைபெற உள்ளது.
மே-2 முதல் காவலர்கள் விடுப்பு எடுக்க கூடாது - தமிழக டிஜிபி உத்தரவு
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4-ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என தமிழக டிஜிபி உத்தரவு விட்டுள்ளார்.

இதன்படி, தற்போது விடுப்பில் உள்ள காவலர்களும் மே 2ஆம் தேதி முதல் விடுப்பை நீட்டிக்கக்கூடாது எனவும் மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல், களப்பிரிவுகள் மற்றும் சிறப்புப் பிரிவுகளில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com