பெண் போலீசின் கணவர் தற்கொலை

பெண் போலீசின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
பெண் போலீசின் கணவர் தற்கொலை
Published on

திருச்சி கே.சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 32). இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர் சென்னை பெருநகர ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டான். மகன் இறந்த துக்கத்தில் சிவக்குமார் மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் அவருக்கு வயிற்றில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிவக்குமார் நேற்று முன்தினம் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com