விக்கிரவாண்டி அருகே ஆற்றில் மூழ்கி பெண் போலீசின் கணவர் பலி

விக்கிரவாண்டி அருகே மீன் பிடித்தபோது ஆற்றில் மூழ்கி பெண் போலீசின் கணவர் பலியானார்.
விக்கிரவாண்டி அருகே ஆற்றில் மூழ்கி பெண் போலீசின் கணவர் பலி
Published on

விக்கிரவாண்டி, 

விவசாயி

வானூர் அருகே இளையாண்டிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35). விவசாயி. இவரது மனைவி பூவிழி. இவர் மயிலம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணி புரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு மதிவதனா (9) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், கண்ணன் நேற்று மாலை 6 மணி அளவில் தனது நண்பர்கள் 2 பேருடன் விக்கிரவாண்டி அருகே ஐவேலி பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றில் மீன்பிடிக்க சென்றார்.

தண்ணீரில் மூழ்கி பலி

அப்போது கண்ணன் ஆழமான பகுதிக்கு சென்று மீன் பிடித்ததாக தெரிகிறது. இதில் திடிரென அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com