தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

மொத்தம் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்.
தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடைபெறும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும்.

இம்மையங்களில் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com