உதயநிதி ஸ்டாலின் அரசியல் வருகை மு.க.அழகிரி பாய்ச்சல்

உதயநிதி ஸ்டாலின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு அரசியல் சாக்கடை தான். யார் வேண்டுமானாலும் வரலாம் என மு.க.அழகிரி கூறினார். #MKAzhagiri #UdhayanidhiStalin #DMK
உதயநிதி ஸ்டாலின் அரசியல் வருகை மு.க.அழகிரி பாய்ச்சல்
Published on

சென்னை

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியை சேர்ந்த தி.மு.க. தொண்டர் கொடியரசனின் மகள் கார்த்தீஸ்வரியின் திருமணம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மு.க.அழகிரி திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டார்.

அப்போது நிருபர்கள் அவரிடம், உதயநிதி ஸ்டாலின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, அரசியல் சாக்கடை தான். யார் வேண்டுமானாலும் வரலாம் என்று பதில் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேள்விக்கேட்க தொடங்கினர். ஆனால் அவர் அங்கிருந்து காரில் சென்று விட்டார்.

கடந்த ஜனவரி மாதம் உதயநிதி ஸ்டாலின் தனியார் டிவிக்கு பேட்டி அளிக்கும் போது மு.க.அழகிரி கட்சியில் இல்லை கட்சியில் இல்லாதவரை பற்றி பேச தேவையில்லை என கூறினார் என்பது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com