இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்

திருவைக்காவூர் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடந்தது
இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
Published on

கபிஸ்தலம்;

கபிஸ்தலம் அருகே உள்ள திருவைக்காவூர் ஊராட்சி மேலமாஞ்சேரி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளை கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. விவசாய சங்க மாவட்ட செயலாளர் சாமு. தர்மராஜ், ஒன்றிய செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மேலமாஞ்சேரி மற்றும் கானூர் கிராமங்களுக்கு ஈமக்கிரியை மண்டபம் கட்டித் தர வேண்டும், மயானசாலைக்கு மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும், மயானத்தில் உள்ள கைப்பம்பை பழுது நீக்கம் செய்ய வேண்டும், திருவைகாவூர் ஊராட்சியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com