அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர்.
Published on

அண்ணா சிலைக்கு மாலை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை தாங்கி, ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிரபாகரன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. சார்பில்...

இதேபோல் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு கட்சியின் அமைப்பு செயலாளரும், சட்டமன்ற முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணை செயலாளர் மருதராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பூவைசெழியன், இளம்பை தமிழ்ச்செல்வன், மாவட்ட அவைத்தலைவர் குன்னம் குணசீலன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அந்தூர் ராஜேந்திரன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் கண்ணுசாமி, முள்ளுக்குறிச்சி சுரேஷ் மற்றும் துறைமங்கலம் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com