பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிக்கப்பட்டது.
பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
Published on

தந்தை பெரியாரின் 49-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அரியலூரில் தி.க. சார்பில் கோவிந்தசாமி தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் மாணவர்கள் அமைப்பினர் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஜெயங்கொண்டத்தில் தி.க. சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஜெயங்கொண்டம் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரியார் சிலைக்கு ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமையில் ஜெயங்கொண்ட சட்டமன்ற தொகுதி செயலாளர் கா.இலக்கியதாசன் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com