"பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது": கனிமொழி கருணாநிதி எம்.பி பேட்டி

பொள்ளாச்சி வழக்கை எடப்பாடி பழனிசாமி தானாக முன் வந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றவில்லை என்று தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
"பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது": கனிமொழி கருணாநிதி எம்.பி பேட்டி
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடத்த கொடுமைக்கு வழங்கப்பட்ட நியாயமான தீர்ப்பு. குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்கள் வெளியிடாமல் அவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இந்தத் தீர்ப்பினால் பெண்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். முதல்-அமைச்சர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் பாலியல் வன்கொடுமை வளர்ச்சிக்கு சிபிஐக்கு மாற்றி தண்டனை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அது நிறைவேறி உள்ளது.

அதிமுக ஆட்சியில் இந்த வழக்கை விசாரிக்க முடியாமல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்தனர். ஆனால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கூறி வந்தனர் அதன் அடிப்படையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டு தீர்ப்பு கிடைத்துள்ளது. மேலும் பாலியல் குற்றங்களுக்கு எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் குற்றம் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு பாத்துக்காப்பான மாநிலமாக உள்ளது. இன்று அதிமுக வெட்கி தலைகுனிய வேண்டும். அதிமுக ஆட்சியில் யாரை காப்பாற்ற நினைத்தார்களோ அவர்களுக்கு தற்போது தண்டனை கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு நல்ல தீர்ப்பு என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com