

பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கெங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பிரஜித் (வயது 17). இவர் தனியார் கல்லூரி யில் படித்து வந்தார். இந்தநிலையில் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கல்லூரி மாணவர் பிரஜித்தும். 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்துள்ளனர். இதனை அறிந்த இருவீட்டாரும் கண்டித்துள்ளனர். இதனால் மாணவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். காதலி இறந்த சோகத்தில் மனமுடைந்து காணப்பட்ட பிரஜித், அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.