பொள்ளாச்சி சம்பவம்: யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
பொள்ளாச்சி சம்பவம்: யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
Published on

ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொள்ளாச்சி சம்பவம் எல்லோருக்கும் மனதளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த காலக்கட்டத்தில் இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வேதனையை தருகிறது. யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பின்புலம் கொண்டவராக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையை தருவது மூலமாக வருங்காலத்தில் தவறு செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com