சக மாணவர்களுக்கு விற்க முயற்சி வீட்டில் போதை மாத்திரைகள் பதுக்கிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கைது

சக மாணவர்களுக்கு விற்க வீட்டில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
சக மாணவர்களுக்கு விற்க முயற்சி வீட்டில் போதை மாத்திரைகள் பதுக்கிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கைது
Published on

சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த 17 வயது மாணவன், பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக பல்லாவரம் போலீசார், குறிப்பிட்ட அந்த வீட்டில் சோதனை செய்தனர். அதில், 590 போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அந்த மாணவர், போதை மாத்திரைகளை, சக மாணவர்களுக்கு விற்பனை சய்ய வைத்திருப்பது தெரிந்தது. போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், மாணவரை கைது செய்தனர்.

அதேபோல் ஆவடி அடுத்த காட்டூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலையில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேரை போலீசார் மடக்கிபிடித்து சோதனை செய்தனர்.

அவர்களிடம் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (25), மதுரவாயலை சேர்ந்த விக்னேஸ்வரன் (22) மற்றும் கார்த்திக் (22) என்பதும், இவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக போதை மாத்திரைகளை கொண்டு சென்றதும் தெரிந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com