பொங்கல் பண்டிகை: தமிழகத்தில் 2 நாட்களில் ரூ. 518 கோடிக்கு மது விற்பனை


பொங்கல் பண்டிகை: தமிழகத்தில் 2 நாட்களில் ரூ. 518 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 16 Jan 2026 8:41 PM IST (Updated: 16 Jan 2026 8:59 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.

சென்னை

சென்னை,

தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருக்கின்றன. இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் ரூ. 518 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.

போகிப்பண்டிகையான 14ம் தேதி ரூ. 217 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இதையடுத்து பொங்கல் பண்டிகை தினமான நேற்று ரூ. 301 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் கடந்த 2 தினங்களில் மட்டும் ரூ. 518 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது 4 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில் நடப்பு ஆண்டு 2 நாட்களில் ரூ. 518 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இதில் சென்னை மண்டலத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் அதிகபட்சமாக ரூ. 98.75 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

அதே போல் திருச்சி மண்டலத்தில் ரூ.85.13 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.95.87 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.79.59 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.76.02 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

மேலும் மனமகிழ் மன்றங்களில் கடந்த 14-ந்தேதி ரூ.33.16 கோடிக்கும், 15-ந்தேதி ரூ.49.43 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story