தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானையும் வழங்க வேண்டும் கலெக்டரிடம் தொழிலாளர்கள் கோரிக்கை

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானையும் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனா.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானையும் வழங்க வேண்டும் கலெக்டரிடம் தொழிலாளர்கள் கோரிக்கை
Published on

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர், நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலை சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் செய்து வருகிறார்கள். இவர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மிகவும் வறுமையில் வாழ்கின்றனர்.

இவர்களது வறுமையை போக்கும் வகையில், தமிழகத்தில் அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் திருநாளில் பச்சரிசி, சக்கரை, முந்திரி, ஏலக்காய், கரும்பு போன்ற பொங்கல் தொகுப்புகளுடன், புதிய மண் பானை மற்றும் மண் அடுப்புகளையும் சேர்த்து வழங்கிட வேண்டும். தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்வதன் மூலம், தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான மண்பாண்ட தொழிலாளர்களுக்கு பெரும் உதவியாக அமையும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com