பொங்கல் சிறப்பு ரெயில்கள் - இன்று முன்பதிவு தொடக்கம்

எழும்பூர்-நெல்லை உள்பட 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* நாகர்கோவிலில் இருந்து வருகிற 11,18 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 12,19 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் (06011), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
* கன்னியாகுமரியில் இருந்து வருகிற 13,20 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06054), மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06053), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
நெல்லை-செங்கல்பட்டு
* நெல்லையில் இருந்து வருகிற 9, 16 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் சிறப்பு ரெயில் (06156), அதேநாள் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து வருகிற 9,16 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06155), மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* நெல்லையில் இருந்து வருகிற 10,17 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் சிறப்பு ரெயில் (06158), அதேநாள் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து வருகிற 10,17 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06157), மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நெல்லை சென்றடையும்.
சென்னை சென்டிரல்-கோவை
* கோவையில் இருந்து வருகிற 11,18 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06034), மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்டிரலில் இருந்து வருகிற 12,19 ஆகிய தேதிகளில் இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் சிறப்பு ரெயில் (06033), மறுநாள் காலை 9 மணிக்கு கோவை சென்றடையும்.
* போத்தனூரில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06024), அதேநாள் காலை 10.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்டிரலில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (06023), அதேநாள் இரவு 11.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
எழும்பூர்-நெல்லை
* நெல்லையில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் சிறப்பு ரெயில் (06070), மறுநாள் காலை 10.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து வருகிற 9-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06069), அதேநாள் இரவு 11.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
தாம்பரம்-ராமேசுவரம்
* ராமேசுவரத்தில் இருந்து வருகிற 13,20 ஆகிய தேதிகளில் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06106), மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சிறப்பு ரெயில் (06105), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.
இவை உள்பட மொத்தம் 10 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு 4-ந் தேதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






