

சென்னை,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 14-ந்தேதி போகி அன்று சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்ய ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுமக்கள் ரெயில் பயணத்தை அதிகளவில் விரும்புகின்றனர். இதனால், ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதற்கு முன்பே ஏராளமானோர் காத்திருந்தனர்.
அந்த வகையில், ஜனவரி 14-ந்தேதி போகி அன்று பயணம் செய்வதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக டோக்கன் பெற்ற ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். ஆனால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
குறிப்பாக, 2-வது எண் டோக்கன் பெற்றிருந்த பயணிக்கே டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.