உலகம் முழுவதும் தமிழில் ப்ரோமோஷன் செய்யப்படும் பொன்னியின் செல்வன்-2!

பொன்னியின் செல்வன்-2 இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக தனது படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் தயாரிப்பு நிறுவனம்.
Published on

Lyca Productions சுபாஷ்கரன் தயாரிப்பில் ணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா மூவியாக இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் முதல் படம் ps 2 4DX இல் வெளியாக உள்ளது.

கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படம் படத்தின் முதல் பாகத்துக்கு பின் 2-ம் பாகம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் ஒரு வார காலமே இருக்கக் கூடிய நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.

லண்டன், துபாய் என உலகம் முழுவதும் விளம்பரம் செய்யப்படும் இத்திரைப்படத்தின் ப்ரோமோஷனானது முழுக்க முழுக்க தமிழிலேயே செய்யப்படுகிறது.

ஒரு வேனில் பொன்னியின் செல்வன்-2 படத்தின் டிரைலர் தமிழிலேயே திரையிடப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகிறது. தமிழர்களின் வரலாற்றை உலகம் முழுக்க கொண்டாடும் படமாக உருவாக்கி, அதை தமிழிலேயே ப்ரோமோஷன் செய்யப்படுவது தமிழர்களுக்கு உண்டான பெருமையாகவே பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக உலகம் முழுவதும் ஒரு படத்தை வெளியிடும் தயாரிப்பு நிறுவனமாக லைக்கா ப்ரொடக்சன் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com