திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

வீரவநல்லூர் திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
Published on

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பூக்குழி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான பூக்குழி திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா, அர்ச்சுனர் சுவாமி தவக்கோலம் வீதி உலா, தபசு காட்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், மாலை 7 மணிக்கு மேல் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான விரதம் இருந்த பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' கோஷத்துடன் பூக்குழி இறங்கினர். தொடர்ந்து சுவாமி-அம்பாள் சப்பரம் வீதி உலா நடைபெற்றது.

விழாவில் வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா, ஓய்வு பெற்ற தாசில்தார் சுப்பிரமணியன், தி.மு.க நகர செயலாளர் சுப்பையா, கவுன்சிலர்கள் சிதம்பரம், முத்துக்குமார், வெங்கடேஸ்வரி மற்றும் இசக்கி சரவணன், குமரன், பார்வதிநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அக்தார் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com