மோசமான குப்பை மேலாண்மை: சென்னை மாநகராட்சிக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி


மோசமான குப்பை மேலாண்மை: சென்னை மாநகராட்சிக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி
x

ஆய்வுப் பயணங்களில் இருந்து கற்றுக் கொண்டு செயல்படுத்திய ஒரு நடைமுறையை குறிப்பிட முடியுமா? என்று கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியை மேம்படுத்த நீங்கள் மேற்கொண்ட வெளிநாட்டு ஆய்வுப் பயணங்களில் இருந்து கற்றுக் கொண்டு செயல்படுத்திய ஒரு நடைமுறையை குறிப்பிட முடியுமா..?

மோசமான குப்பை மேலாண்மை, தெரு நாய்கள், உடைந்த நடைபாதைகள் சென்னையின் அடையாளமாகிவிட்டன. மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு சென்று முதலில் பாருங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



1 More update

Next Story