போப் பிரான்சிஸ் உடல் இன்று அடக்கம் - சென்னையில் அரை கம்பத்தில் பறந்த தேசிய கொடி

இறுதிச்சடங்கு அன்று இந்தியா முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
போப் பிரான்சிஸ் உடல் இன்று அடக்கம் - சென்னையில் அரை கம்பத்தில் பறந்த தேசிய கொடி
Published on

சென்னை,

உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர்(வயது 88), உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந்தேதி உயிரிழந்தார். போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் இறுதிச்சடங்கு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இறுதிச்சடங்கிற்கு முன் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக போப் பிரான்சிஸ் உடல் ரோம் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு நடைபெறும் 26ம் (இன்று) தேதி மத்திய அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இறுதிச்சடங்கு அன்று இந்தியா முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மறைந்த போப் பிரான்சிஸ் உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளதால் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com