மக்கள் தொகை தின பேச்சு போட்டி

கட்டக்குடி அரசு பள்ளியில் மக்கள் தொகை தின பேச்சு போட்டி நடந்தது.
மக்கள் தொகை தின பேச்சு போட்டி
Published on

வடுவூர்;

வடுவூர் அருகே உள்ள கட்டக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு " பெண் சிசுக்கொலை தடுப்பில் சமூகத்தின் பங்கு " மற்றும் பெண் கல்வியும் மக்கள் தொகை பெருக்கமும் " ஆகிய இரு தலைப்புகளில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை பி.மலர்க்கொடி தலைமை தாங்கினா. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணி முத்துலட்சுமி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் குப்புசாமி, வட்டார சுகாதார புள்ளியாலர் சங்கவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பார்த்திபன், சண்முகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com