பெண்களிடம் ஆபாச பேட்டி: யூடியூப் சேனல் முடக்கம் போலீசார் நடவடிக்கை

பெண்களிடம் ஆபாச பேட்டி தொடர்பாக யூடியூப் சேனல் முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
பெண்களிடம் ஆபாச பேட்டி: யூடியூப் சேனல் முடக்கம் போலீசார் நடவடிக்கை
Published on

சென்னை,

சென்னை கடற்கரை பகுதிகளில் இளம்பெண்களிடம் ஆபாசமான முறையில் பேட்டி எடுத்து, யூடியூப்பில் பதிவேற்றம் செய்து வந்த சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலின் உரிமையாளர் தினேஷ் (வயது 31), தொகுப்பாளர் ஆசின்பத்சா (23), கேமராமேன் அஜய்பாபு (24) ஆகிய 3 பேரை சாஸ்திரிநகர் போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர்.

இந்த யூடியூப் சேனலில் ஆபாசமாக பேட்டியளித்து, ஆண்களை உல்லாசத்துக்கு அழைத்து சவால்விட்ட இளம்பெண் ஒருவரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தநிலையில் சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல், சென்னை போலீசார் பரிந்துரையின்பேரில் யூடியூப் நிறுவனம் முடக்கி உள்ளது. இதுபோன்ற ஆபாசமான முறையில் செயல்படும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அந்த சேனல்களை முடக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com