யூ-டியூப்பில் ஆபாச பேச்சு: 'பப்ஜி' மதன் தலைமறைவாகி உள்ளதாக தகவல்

புளியந்தோப்பு சைபர் பிரிவில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டநிலையில், மதன் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
யூ-டியூப்பில் ஆபாச பேச்சு: 'பப்ஜி' மதன் தலைமறைவாகி உள்ளதாக தகவல்
Published on

சென்னை,

ஆன்லைனில் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு லைவ் வீடியோ கேம்களில் எளிதில் வெல்வதற்கான டிப்ஸ் சொல்லித்தரும் வகையில் யு-டியூப் சேனலை நடத்தி வருபவர் மதன்.

ஆரம்பத்தில் இவரது ஆபாசமான பேச்சுகளுக்கு கிடைத்த வரவேற்பால், டாக்ஸிக் மதன் 18+ என்கிற மற்றொரு யூ-டியூப் சேனலை அவர் தொடங்கினார். இந்த யூ-டியூப் சேனல்களில் இவர் தன்னோடு ஆன்லைனில் விளையாடும் பெண்கள் உள்பட சக போட்டியாளர்களை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாக தெரிகிறது.

மதனின் ஆபாச பேச்சுகள் குறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி புளியந்தோப்பு சைபர் பிரிவு போலீசார் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் மதன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மதனின் வலைதள பக்கங்களை முடக்க யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com