ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கஞ்சி வார்க்கும் விழா

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கஞ்சி வார்க்கும் விழா நடைபெற்றது.
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கஞ்சி வார்க்கும் விழா
Published on

அறந்தாங்கி குட்டைக்குளம் கீழக்கரையில் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் மழை வளம் வேண்டியும், குடும்ப நலன், குழந்தை வரன் வேண்டியும் பெண்கள் ஒரு வார காலமாக விரதமிருந்து கஞ்சி வார்க்கும் விழா நடைபெற்றது. விழாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்று கஞ்சி வார்க்கும் விழாவில் கலந்து கொண்டனர். ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலமானது, பெரியப்பள்ளிவாசல், பெரியகடைவீதி வழியாக சக்தி பீடத்தை வந்தடைந்தனர். ஊர்வலத்தின் போது பெண்கள், ஓம் சக்தி... ஆதிபராசக்தி... என கோஷமிட்டு சென்றனர். தொடர்ந்து தாங்கள் தலையில் சுமந்து வந்த களையக்கஞ்சியை கோவிலில் வார்த்தனர். பின்பு அன்னை ஆதிபராசக்திக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com