புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு - யார் யாருக்கு எந்த துறை.? - முழு விவரம்

தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் இன்று பதவியேற்றனர்.
புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு - யார் யாருக்கு எந்த துறை.? - முழு விவரம்
Published on

சென்னை,

தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கவர்னர் அர்லேகர் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்த 7 பேர் பதவியேற்றுள்ளனர்.

இந்த நிலையில், புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து கவர்னர் அர்லேகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 23 அமைச்சர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இலாகா விபரம் பின்வருமாறு;

அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் பட்டியல்;

1.கே.ஏ.செங்கோட்டையன் - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

2.ஸ்ரீநாத் - மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

3.எஸ்.கமலி - கால்நடைத்துறை

4.சி.விஜயலட்சுமி - பால்வளத்துறை

5.ஆர்.வி.ரஞ்சித்குமார் - வனத்துறை

6.வினோத் - வேளாண் மற்றும் உழவர் நலத்துறை

7.ராஜீவ் - சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை

8.பி.ராஜ்குமார் - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

9.வி.காந்திராஜ் - கூட்டுறவுத் துறை

10.பி.மதன் ராஜா - சிறு, குறு, நடுத்தர தொழில்துறை

11.கே.ஜெகதீஸ்வரி - சமூக நலத்துறை

12.எஸ்.ராஜேஷ்குமார் - சுற்றுலாத்துறை

13.எம்.விஜய் பாலாஜி - கைத்தறி, ஜவுளி மற்றும் கதர் துறை

14.டி.லோகேஷ் தமிழ்செல்வன் - வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை

15.ஏ.விஜய் தமிழன் பார்த்திபன் - போக்குவரத்து துறை

16.ரமேஷ் - இந்து சமய அறநிலையத்துறை

17.பி.விஸ்வநாதன் - உயர் கல்வித்துறை

18.ஆர்.குமார் - செயற்கை நுண்ணறவு, தகவல் தொழில்நுட்பம்

19.கே.தென்னரசு - வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை

20. வி.சம்பத்குமார் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

21.ஜெ.முகமது பர்வாஸ் - தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

22.டி.சரத்குமார் - மனிதவள மேலாண்மை துறை

23.என்.மரிய வில்சன் - நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை

24.கே.விக்னேஷ் - மதுவிலக்கு மற்றும் கலால் துறை

Attachment
PDF
Lok Bhavan, Tamil Nadu Press Release No. 40 Dated. 21.05.2026 - Tamil Nadu Ministers Portfolio List
Preview
X

Daily Thanthi
www.dailythanthi.com