தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்
Published on

சென்னை,

தமிழக அமைச்சரவையில் சிறிய அளவில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, அமைச்சர்கள் ராஜகண்ணப்பன் மற்றும் பொன்முடி ஆகியோரிடம் இருந்த இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

* பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி, கிராம தொழில்கள் இலாகா, அமைச்சர் பொன்முடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வனத்துறையுடன் சேர்த்து காதி, கிராம தொழில்கள் இலாகாவையும் அமைச்சர் பொன்முடி கவனிப்பார். அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறையை மட்டும் கவனிப்பார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று கவர்னர் ஆர்.என்.ரவி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com