தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்


தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்
x
தினத்தந்தி 8 May 2025 12:40 PM IST (Updated: 8 May 2025 1:46 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை, அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்;

* அமைச்சர்கள் ரகுபதி, துரைமுருகன் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.

* அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை, அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

* அமைச்சர் ரகுபதிக்கு கனிமவளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அமைச்சர் ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

* அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறையுடன் சட்டத்துறையையும் கூடுதலாக கவனிப்பார்.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட இல்லாத நிலையில், அமைச்சர்களின் இலாகா மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story