புதிதாக பொறுப்பேற்ற இரண்டு அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு

தவெக அமைச்சரவையில் விசிகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் இடம் பெற்றுள்ளது.
புதிதாக பொறுப்பேற்ற இரண்டு அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு
Published on

முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விசிகவின் வன்னியரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜஹானுக்கு அமைச்சர்கள் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர்கள் இருவரும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வன்னியரசு திண்டிவனம் தொகுதியிலும், ஷாஜஹான் பாபநாசம் தொகுதியிலும் வெற்றி பெற்றார்கள். இவர்களுக்கான இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்.எல்.) கட்சியின் ஷாஜஹான் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும், விசிகவின் வன்னியரசு சமூகநீதித் துறை அமைச்சராகவும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம் சார்ந்த விவகாரங்களை அமைச்சர் வன்னி அரசு கவனிப்பார். அமைச்சர் ஷாஜகானுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் சிறுபான்மையினர் நலன், வக்பு வாரியம் ஆகியவை வரும்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com