சென்னையில் தபால்துறை குறைதீர்ப்பு முகாம்

சென்னை நகர தெற்கு கோட்டம் என்ற முகவரிக்கு 2026 அக்டோபர் 22-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
சென்னையில் தபால்துறை குறைதீர்ப்பு முகாம்
தபால் துறை குறைதீர்ப்பு முகாம்
Published on: 

சென்னை,

சென்னையில் தெற்கு கோட்ட அளவிலான அஞ்சலக குறைதீர்ப்பு முகாம் வருகிற அக்டோபர் 27-ம் தேதியன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை நகர அஞ்சல் துறை மூத்த கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறைதீர்ப்பு முகாம்

அஞ்சலக முதுநிலைக் கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை நகர தெற்கு கோட்டம், வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 600017 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் அஞ்சல் அலுவலக முதுநிலைக் கண்காணிப்பாளரால் இந்த முகாம் நடைபெறுகிறது. இந்தக் குறை தீர்ப்பு முகாமில் அஞ்சல் துறை சார்ந்த தயாரிப்புகள், சேவைகள் குறித்த தனிப்பட்ட குறைகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

முன்பதிவு அவசியம்

வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை சாதாரண அல்லது விரைவு தபால் மூலம் அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை நகர தெற்கு கோட்டம் என்ற முகவரிக்கு 2026 அக்டோபர் 22-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

என்னென்ன விவரங்கள் தேவை?

தபால்/பார்சல் தொடர்பான புகார்: அஞ்சலிடப்பட்ட தேதி, நேரம், அனுப்புநர் மற்றும் பெறுநரின் முழு முகவரி, தேதியுடன் கூடிய ரசீது எண் ஆகிய முழு விவரங்கள் இருக்க வேண்டும்.

சேமிப்பு கணக்கு / ஆயுள் காப்பீடு: அஞ்சலக சேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீடு அல்லது ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீடு தொடர்பான புகாராக இருந்தால் கணக்கு அல்லது பாலிசி எண், பெயர், டெபாசிட் அல்லது காப்பீடு செய்தவரின் முழு முகவரி, சம்பந்தப்பட்ட அஞ்சலகத்தின் பெயர் மற்றும் ஏற்கனவே தபால் துறைக்கு அனுப்பப்பட்ட கடித விவரங்கள் இடம்பெற வேண்டும்.

கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம்

புகார்களை சாதாரண தபால் அல்லது பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். தனியார் கூரியர் மூலம் அனுப்பப்படும் கடிதங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படாது. புகார் அனுப்பும் அஞ்சல் உறையின் மேல், "கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் சென்னை நகர தெற்கு கோட்டம் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com