

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தபால் வாக்கு அளிப்பதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்குச் சீட்டுகளை வழங்கும் பணி நேற்று நடைபெற்றது. இதையடுத்து இன்று முதல் சென்னையில் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் பெறப்படுகின்றன.
மேலும், சென்னையில், 16 தொகுதிகளில் இந்த தபால் வாக்கு பதிவு செய்யப்பட உள்ள நிலையில், 15 தபால் ஓட்டுக்களுக்கு ஒரு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த தபால் வாக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை பதிவு செய்யப்படுகிறது. தபால் வாக்குகள் பதிவு வீடியோ எடுக்கப்படுகிறது. இந்த தபால் வாக்கு பதிவு செய்ய 7,300 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.