

நெல்லை பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் நெல்லை கோட்டம் சார்பில், டார்கெட் கெடுபிடிகளை கண்டித்து நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை கோட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். பொருளாளர் திருமால், கற்பகராஜ், கிறிஸ்டோபர், வெற்றிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.