

கோவை,
கோவை மாவட்ட பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர்கள், அணி நிர்வாகிகள், வேட்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தற்போது வெளிநாட்டில் இருப்பதால் இந்த கூட்டத் தில் பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க வில்லை. மேலும் அவர், கடந்த மாதம் வாக்குப்பதிவு முடிந்தவுடன் கோவையில் நடத்த மையக்குழு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரது புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். அதில், அண்ணாமலை படத்துடன், பயம் அறியாதவர்களுக்கு எல்லையே கிடையாது என்ற வாசகம் இடம் பெற்று உள்ளது. இந்த சுவரொட்டிகள் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.