காந்தியின் பேரன்... கமல்ஹாசனை வாழ்த்தி கோவையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு


காந்தியின் பேரன்... கமல்ஹாசனை வாழ்த்தி கோவையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு
x

மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் இன்று பதவியேற்க உள்ளார்.

கோவை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று (வெள்ளிக்கிழமை) மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளார். இதனால் கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்து உள்ளனர். கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் அவருக்கு பல்வேறு இடங்களில் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.

இதில் மத்திய அரசின் கோட்டைக்குள் காந்தியின் பேரன் கமல்ஹாசன் வருகிறார் என குறிப்பிடப்பட்டு இருந்தது. கமல்ஹாசன் காந்தியின் அகிம்சையின் மீதான தனது ஈடுபாடு குறித்து பல இடங்களில் கூறி உள்ளார். மேலும் அவர் இயக்கி நடித்த ஹேராம் படத்தில் கூட காந்தியை மையமாக வைத்து கதாபாத்திரமாக்கியிருப்பார்.

குறிப்பாக, அந்த படத்தில் காந்தியின் பேரனான துஷார் காந்தியையும் நடிக்க வைத்திருப்பார். எனவே காந்தியின் பேரன் கமல்ஹாசன் என வாழ்த்தி சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளதாக தெரிகிறது. கோவையில் காந்தியின் பேரன் என்று கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து சுவரொட்டி ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

1 More update

Next Story